×

வெளிநாட்டு முதலீட்டை கொண்டு வருவதில் இந்தியா சாதனை: பிரதமர் மோடி பெருமிதம்

சம்பால்: இந்தியா வெளிநாட்டில் இருந்து நமது பழங்கால சிலைகளை கொண்டு வருவது மட்டுமல்லாமல் வெளிநாட்டு முதலீட்டை பெறுவதிலும் சாதனை படைப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஸ்ரீகல்கி தாம் கோயிலுக்கு அடிக்கல் நாட்டுவிழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து விழாவில் பேசிய பிரதமர் மோடி, ‘‘ஒரு புறம் புனித தலங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றது. மற்றொருபுறம் நகரங்கள் ஹெடெக் உள்கட்டமைப்பை பெறுகின்றன. நமது புராதன சிலைகள் வெளிநாட்டில் இருந்து திரும்ப கொண்டு வரப்படுகின்றது. மேலும் நாம் சாதனை படைக்கும் அளவுக்கு அந்நிய முதலீட்டை பெற்றுவருகிறோம்” என்றார். இந்த விழாவில் முதல்வர் யோகி ஆதித்யநாத், மத தலைவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

* சத்ரபதி சிவாஜிக்கு அஞ்சலி
பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில்,‘‘சத்ரபதி சிவாஜி மகராஜின் ஜெயந்தியன்று அவருக்கு அஞ்சலிகள். அவர் தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர், போர் வீரர், கலாச்சாரத்தின் பாதுகாவலர் மற்றும் நல்லாட்சியின் உருவகம். அவரது வாழ்க்கை தலைமுறைக்கும் ஊக்கமளிக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.

The post வெளிநாட்டு முதலீட்டை கொண்டு வருவதில் இந்தியா சாதனை: பிரதமர் மோடி பெருமிதம் appeared first on Dinakaran.

Tags : India ,PM Modi ,Modi ,Srikalki Dham Temple ,Uttar Pradesh ,
× RELATED I.N.D.I.A. கூட்டணிக்கு செலுத்தும் வாக்குகள் வீணாவது உறுதி : பிரதமர் மோடி